பள்ளியில் திடீரென வெடித்த ஏசி.. அலறியடித்து ஓடிய மாணவர்கள் - பரபரப்பு சம்பவம் !

Published : Aug 24, 2022, 04:21 PM ISTUpdated : Aug 24, 2022, 04:26 PM IST
பள்ளியில் திடீரென வெடித்த ஏசி.. அலறியடித்து ஓடிய மாணவர்கள் - பரபரப்பு சம்பவம் !

சுருக்கம்

ஈரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையில் ஏசி திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு திருநகர் காலனியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறையில் தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்க இருந்துள்ளனர். இதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியை அருணாதேவி என்பவர் ஏசியை இயக்கியுள்ளார். அப்போது திடீரென்று புகை வந்ததால் அதிர்ச்சி அடைந்தவர் அறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !

அப்போது  இயக்கத்தில் இருந்த ஏசியானது திடீரென வெடித்து சிதறியது. இதனால் அந்த அறையில் தீப்பற்றியது. அறையில் இருந்த கணினி மற்றும் மேலும் சில பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. நல்வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அருகில் இருந்த அறைகளில் மாணவ மாணவிகள் மற்ற அறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

உடனடியாக ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பள்ளி வகுப்பறையில் திடீரென ஏசி வெடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..2 குழந்தைகளை அடித்தே கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட தாய்.. குடும்ப தகராறில் விபரீதம்

PREV
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி