
கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி பகுதியில் சாலை ஓரமுள்ள மைல் கல்லுக்கு ஆயுத பூஜை நடத்தி சாலைப் பணியாளர்கள் வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் உள்ளது சம்புகுடப்பட்டி. இங்குள்ள மைல் கல்லை சாலைப் பணியாளர்கள் மாலை அணிவித்து வாழைமரத் தோரணங்கள் கட்டி கற்பூர தீபம் ஏற்றி வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர் அசோக், சாலை பணியாளர்கள் சங்க வட்ட கிளை தலைவர் குமரேசன், மாவட்டத் துணைத் தலைவர் மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் கருணாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் வல்லரசன், ஆலோசகர் ராமமூர்த்தி, மாதப்பன், மாது, அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.