திருவள்ளூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட் செய்யும் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை தொடர்ந்து ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையில் சுமார் 90,000 லிட்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் வழக்கம்போல் பால் உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது உற்பத்தியாகி வெளியே வரும்போது, அதனை பிளாஸ்டிக் டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் உமா ராணி(30) என்பவர் ஈடுபட்டிருந்தார்.
இதையும் படிங்க: குடையில்லாமல் வெளியே போகாதீங்க! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் சம்பவம் இருக்காம்!
அப்போது எதிர்பாராத விதமாக துப்பட்டாவும், தலைமுடியும் இயந்திரத்தில் சிக்கியது. இதனால் உமா ராணியின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உமா ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இனி ஈஸியாக ரயில் டிக்கெட் பெறலாம்! நம்ம ஊரிலும் வந்தாச்சு.. எப்படி தெரியுமா?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இந்த துயர சம்பவத்தை அடுத்து காக்களூர் ஆவின் பால் பண்ணையில் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.