இனி ஈஸியாக ரயில் டிக்கெட் பெறலாம்! நம்ம ஊரிலும் வந்தாச்சு.. எப்படி தெரியுமா?
தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில், 78 ரயில் நிலையங்களில் QR குறியீடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம். நீண்ட வரிசையில் காத்திருக்காமல், பி.எச்.ஐ.எம், பேடிஎம், போன்ற பல டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளங்கள் மூலம் டிக்கெட் பெறலாம்.
Indian Railways
இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு அனைத்தும் எளிமையாக கிடைக்கும் விதமாக பல்வேறு வசதிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் ரயில்வே துறையில், ரயிலில் பயணம் செய்யும் டிக்கெட் கட்டணத்தை டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை கோட்டம் வாரியமாக அறிமுகம் செய்து வருகிறது.
Salem Railway Station
அதன்படி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் வழங்குவதில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: School Holiday: குட்நியூஸ்! ஆகஸ்ட் 24, 25, 26 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை!
QR Code
இதற்காக சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கோவை, போத்தனூர், மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், உள்ளிட்ட 78 ரயில் நிலையங்களில் கியூ ஆர் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.எச்.ஐ.எம், பேடிஎம், ஜிபே, போன் பே, பாங்க் வாலட்ஸ் என பல டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளங்களை பயன்படுத்தலாம்.
Train Ticket
இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல் முன்பதிவு பிளாட்ஃபார்ம் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை எளிதில் பெறலாம். சில்லறை பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.