
தவெக ஆண்டு விழா
தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜூனா பேசுகையில், தளபதி என்று அனைவராலும் அழைக்கப்பட்டு தற்போது தலைவர் என்ற பரிணாமத்தை நோக்கி சென்று கொண்டுள்ளோம். பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்த போது ஒரு அழைப்பு வந்தது. தமிழக வெற்றி கழகத்திலிருந்து துவங்குங்கள் என அழைப்பு வந்தது.
விஜய்யை பார்த்து அவரைப்போல நடிக்கிறார்கள்
தந்தை பெரியார் அம்பேத்கர் வழியில் இணைக்கப்பட்டவன் நான். ஐம்பெரும் தலைவர்களாய் இவர்களின் கொள்கை வழியில் நடக்க வேண்டும் என தன்னை கொள்கை ரீதியில் உள்வாங்கி இருக்கிறார் நம் தலைவர். எனவே என்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டேன். ஆட்சியில் இருப்பவர்கள் என் தலைவரை பார்த்து நடித்து கொண்டிருக்கிறார்கள். அவர் போடுகிற பேண்டு சர்ட்டை கூட மாற்றவில்லை. முதல்வர் போட்ட சட்டையும் பேண்டும் நம் தலைவர் போல உள்ளது. எனவே முதல்வரும் நம் தலைவருடைய ரசிகர்தான், வாரிசு, பிறப்பால் பதவி அடைந்தவர் அண்ணன் சொல்லி என பேச அரம்பித்து விட்டார். தூக்கத்தில் எல்லாம் இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது என சிந்திக்கிறார்கள். எம்ஜிஆர்1979 ஆம் ஆண்டு திமுகவை தூக்கி போட்டார் 1989 வரை ஆட்சிக்கு திமுக வரவில்லை.
துணை முதலமைச்சராக சினிமாவில் நடித்தார்கள்
மக்கள் வரவேற்பார்கள். தொழிலை பொருளாதார தூக்கி எரிந்தவர்களை வரவேற்ப்பார்கள். சில பேர் சினிமாவில் நடித்தார்கள். பிரபலமாகவேண்டும். அதன் பிறகு துணை முதல்வர் ஆக வேண்டும் அவ்வளவு தான். உண்மையாக இருந்து நம்பர் 1 ஆகியுள்ளார் நம் தலைவர். மக்கள் ஆதரவு இல்லாமல் நம்பர் 1 வர முடியாது. எங்கள் கட்சியினர் மீது எப்ஐஆர் பதிவு செய்தாலும், சிறைக்கு செல்லவும் தயார். சிறைக்கு செல்வோம் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் செல்ல தயார். அடுத்த 62 வாரங்கள் நம் தலைவர் தான் எதிர்கட்சி தலைவர். நீங்கள் எது வேண்டும் என்றாலும் செய்யுங்கள்.
திமுகவின் பலமான கூட்டணி உடையும். 2011 ஆம் ஆண்டு இதே கணக்கு போடப்பட்டது. ஆனால் 203 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். திமுக எதிர்கட்சி தலைவர்கள் கூட ஆகவில்லை. தற்போது மக்களிடம் ஆயிரம் ரூபாய் கொடுத்து 10ஆயிரம் பிடிங்கப்படுகிறது. இதையெல்லாம் எதிர்கட்சி தலைவராக இருந்து நம் தலைவர் பேசுவார். ஒவ்வொரு நொடியும் இனி பயணம் தான். அண்ணா, எம்ஜிஆர் ஏற்படுத்தியது போல் அடுத்த பிளவு தமிழகத்தில் ஏற்படும்.
எல்லா திட்டமும் ரெடி, தேர்தல் அரசியல் இவர்களுக்கு தான் தெரியும் கூறுவார்கள், கோவை பக்கம் ஒருவர், திருச்சி பக்கம் ஒருவர், திருவண்ணாமலை பக்கம் பார்த்துக்கொள்வார்கள் என கூறுவார்கள். பண பலத்தை நோக்கி நாங்கள் இல்லை. மக்கள் பலத்தை நோக்கி, உண்மை கொள்கை உள்ளது. தவெகவின் அஜெண்டா ரெடி, 40 சீட் கொடுங்க என கேட்டு வரவில்லை. ஆட்சி அமைக்க வந்துள்ளதாக ஆதவ் அர்ஜூனா பேசினார்.