கோவையில் கெத்து காட்டும் பாஜக.! புதிய அலுவலகம் திறப்பு விழா- அமித்ஷாவிற்கு பூரண கும்ப மரியாதை

Published : Feb 26, 2025, 07:01 AM IST
கோவையில் கெத்து காட்டும் பாஜக.! புதிய அலுவலகம் திறப்பு விழா- அமித்ஷாவிற்கு பூரண கும்ப மரியாதை

சுருக்கம்

மத்திய அமைச்சர் அமித்ஷா கோவைக்கு வருகை தந்துள்ளார். ஈஷா யோகா மைய சிவராத்திரி விழா மற்றும் பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோவையில் பாஜக அலுவலகம் திறப்பு

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக பாஜக அதிரடி அரசியல் செய்து வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில்,  கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கோவை மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு கோவை வந்தடைந்தார்.  விமான நிலையத்தில் ஏராளமான பாஜக வினர் மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அமித்ஷாவிற்கு உற்சாக வரவேற்பு

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த நிர்வாகிகள் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தராஜன்,வானதி சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் கார் மூலம் வெளியே வந்த அமித்ஷாவுக்கு பாஜகவினர் பூரண கும்ப மரியாதையையும் மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.  இதனை காரில் இறங்கிய அமித்ஷா பூரண கும்ப மரியாதையை ஏற்றுக்கொண்டார். 


அமித்ஷாவிற்கு பூரண கும்ப மரியாதை

இதேபோல் கோவை விமான நிலையத்தில் இருந்து நவ இந்தியா பகுதியில்  அமித்ஷா தங்க இருக்கும் தனியார் விடுதி வரை சாலையின் இருபுறமும்  பா.ஜ.க தொண்டர்கள் மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அமித்ஷாவின் கோவை வருகையையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வாகன சோதனை, பதற்றத்திற்குள்ளாகும் பதியில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க வின் புதிய மாநகர அலுவலகத்தினை அமித்ஷா திறந்து வைக்கிறார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளார்.

சிவராத்திரி விழாவில் அமித்ஷா

அதனைத் தொடர்ந்து 26 ம் தேதி இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மறுநாள் காலை தனி ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணியில் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!