Alert : குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! இதை உடனே மறக்காம செய்யுங்க..!

By Raghupati RFirst Published May 29, 2022, 8:03 AM IST
Highlights

Ration : ரேஷன் கார்டுகளில் மோசடிகள் நடைபெறாமல் இருக்க அதற்கான விதிமுறைகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டு

தற்போது அந்த வகையில் ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்கும் கடைசி தேதியை அரசு நீட்டித்துள்ளது. அதன்படி பயனாளிகள் இப்போது ஜூன் 30, 2022 வரை தங்கள் ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைக்க முடியும். கால அவகாசம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் மட்டுமே நேரம் இருக்கும் நிலையில் அதற்குள் இணைத்தால் நல்லது என்று கூறுகின்றனர்.

எவ்வாறு இணைப்பது ?

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கு முதலில் uidai.gov.in என்ற வெப்சைட்டை ஓப்பன்ச் செய்து ‘start now' என்பதைக் கிளிக் செய்யவும். அதில் உங்கள் முகவரி மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும். இதற்குப் பிறகு 'Ration Card Benefit' ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிடவும். அதை பூர்த்தி செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். OTP ஐ நிரப்பியவுடன், உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தி வரும்.

ரேஷன் கார்டு மையம்

ஆன்லைனில் மட்டுமல்ல, ஆப்லைனில் இணைக்கும் வசதியும் உண்டு. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை-யை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் அட்டைதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ராமதாஸ், அன்புமணி செஞ்ச துரோகம்..வன்னிய சமூகம் சும்மா விடாது - காடுவெட்டி குரு மகள் ஆவேசம் !

இதையும் படிங்க : Raid : பிரபல ஆனந்தாஸ் குழும உணவகங்களில் ‘திடீர்’ ஐடி ரெய்டு.. எதற்கு தெரியுமா ?

click me!