அலர்ட்!! அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது..? அறிவித்தது பள்ளிக் கல்வித்துறை..

By Thanalakshmi VFirst Published May 28, 2022, 3:52 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 ல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 3 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பிற்கு மார்ச் 14 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு மார்ச் 13 ஆம் தேதியும் பொதுதேர்வு நடைப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு தேதிகளும் , விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா கால அட்டவணை போல் அல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என்றும் அனைத்து சனிக்கிழமைகளும் பள்ளிகள் விடுமுறை என்றும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை வரும் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த தினங்களில் பள்ளி திறப்புக்கு முன்னதாகவே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகே புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: RAIN : அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அப்டேட் !!

click me!