இன்று முதல் ரசாயன உரம் வேணும்னா ஆதார் எண், கைரேகைப் பதிவு கட்டாயம்;

 
Published : Jun 01, 2017, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
இன்று முதல் ரசாயன உரம் வேணும்னா ஆதார் எண், கைரேகைப் பதிவு கட்டாயம்;

சுருக்கம்

Aadhaar number is must for chemical fertilizers from today

கடலூர்

அரசு மானியத்தில் ரசாயன உரங்களைப் பெறுவதற்கு இன்று முதல் ஆதார் எண் மற்றும் கைரேகைப் பதிவு கட்டாயமாகிறது. இதுக்குதான் இயற்கை விவசாயம், இயற்கை உரங்களைப் பயன்படுத்துங்கனு பெரியவங்க சொல்றாங்க.

விவசாயப் பணிகளுக்குத் தேவையான இரசாயன உரங்களை மத்திய அரசு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும், தனியார் உரக் கடைகளில் விற்பனையாகும் உரங்களும் மானியம் கழிக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது.

உரம் உற்பத்தி நிறுவனங்களுக்கு மொத்தமாக மானியம் வழங்கும் முறையை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. உரக் கடை மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் விற்பனையாகும் உரங்களின் அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது.

இதற்காக விவசாயிகள் உரம் வாங்க வரும்போது, தங்களது ஆதார் அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள 165 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம், 32 மொத்தம், 322 சில்லரை உரக் கடை உரிமையாளர்களுக்கு விற்பனை முனை இயந்திரம் வழங்கப்பட்டு, அதனை இயக்குவதற்கான பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, உரம் பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணைப் பதிவு செய்து, விரல் ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். அதன்பின்னரே விற்பனையாளர்கள் உரங்களை வழங்குவர். இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) வெ.துரைசாமி கூறியது:

“விவசாயிகளுக்கு யூரியா, பொட்டாஷ், காம்ளஸ், டி.ஏ.பி, சூப்பர் ஆகிய உரங்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த உரங்களைப் பெறுவதற்கு மட்டுமே ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னர், உரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் மொத்த அளவுக்கும் அரசு மானியம் அளித்தது. தற்போது உற்பத்தி செய்யப்படும் உரம் விவசாயிகளுக்கு சென்றடைந்துள்ளதை உறுதிப்படுத்தவும், சென்றடைந்த அளவுக்கு மட்டும் மானியம் வழங்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வேளாண்மைத் துறையிடம் தற்போது யூரியா 7 ஆயிரத்து 500 டன், பொட்டாஷ் ஆயிரத்து 737 டன், டிஏபி 3 ஆயிரத்து 80 டன், காம்ப்ளக்ஸ் (கூட்டு உரம்) 7 ஆயிரத்து 130 டன், சூப்பர் 250 டன் இருப்பு உள்ளன.

இந்த நடைமுறையினால் விவசாயிகள் முழுமையான பயனை அடைவார்கள் என்பதால் விவசாயிகள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்புத் தரவேண்டும்” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!