300 வீரர்கள்; 600 காளைகள்; வாடிவாசலை மிரட்டிய சல்லிகட்டுக் காளைகள்…

Asianet News Tamil  
Published : Jun 01, 2017, 09:32 AM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
300 வீரர்கள்; 600 காளைகள்; வாடிவாசலை மிரட்டிய சல்லிகட்டுக் காளைகள்…

சுருக்கம்

300 soldiers 600 bull Bulls hits the vaadivaasal

அரியலூர்

வைத்தியநாதபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 50 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ளது வைத்தியநாதபுரம். இங்கு நேற்று சல்லிக்கட்டுப் போட்டி நடைப்பெற்றது.

வைத்தியநாதபுரம் அருகே உள்ள ஏரியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. தேரடி காளியம்மன் கோவிலிருந்து சீர்வரிசை ஏரியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டது.

முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், பின்னர் வீரர்களுக்கு பரிசோதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன.

இந்த சல்லிக்கட்டில் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

இதில் திருச்சி, லால்குடி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 600-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களையும், வீரர்களை தூக்கி வீசிய காளைகளையும் மக்கள் கைதட்டி ஆராவாரம் செய்தனர்.

காளைகள் முட்டியதில் அன்னிமங்கலத்தை சேர்ந்த கிருபா (30), டால்மியாபுரத்தை சேர்ந்த சதீஸ் (22), கோவண்டாகுறிச்சியை சேர்ந்த அருள்குமார் (20), கண்டராதித்தம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (60), இலந்தைகூடத்தை சேர்ந்த சுரேந்தர் (18) உள்பட 50 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் அடிபணியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்கம், வெள்ளி நாணயம், சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், வேட்டி, சட்டை, புடவை, பீரோ போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

சல்லிக்கட்டுப் போட்டியை திருச்சி, லால்குடி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டுப் போட்டியைக் கண்டுக் களித்தனர்.

PREV
click me!

Recommended Stories

43 வயதில் தில்லையம்மாளுக்கு வந்த ஆசை.. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
ராஜரத்தினம் மைதானத்தில் வாக்கு எண்ணிக்கை - பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் !