TNGIM2024 : வேற லெவலில் முதல்வர் ஸ்டாலின்.. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழை புரிய வைக்க இப்படி ஒரு ஐடியா

By Ajmal Khan  |  First Published Jan 7, 2024, 1:03 PM IST

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சை வெளிநாட்டவர்களும் கவனிக்கும் வகையில் மொழிமாற்றும் கருவி பயன்படுத்தப்பட்டது.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க  தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்று உள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில்  ஜவுளி, காலணி தொழில்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம், வேளாண்மை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.

Latest Videos

பல ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்

முன்னதாக இன்று தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில்  “1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை” (“Tamil Nadu Vision $1 Trillion”) எனும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாட்டில் JSW எனர்ஜி நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும், டாடா நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.  இதே போல பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தங்களை முதலமைச்சர் முன்னிலையில் மாற்றிக்கொண்டர்.

இதனையடுத்து மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் தமிழ்நாட்டுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. 

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு-மொழிபெயர்ப்பு கருவி

மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நிறுவனங்கள் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவுப் பாதையில் பயணிக்கும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாக மேலும் தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுத்துக் கொடுக்கும் என தமிழில் பேசினார்.

இந்த பேச்சு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளவர்களுக்கு புரியும் வகையில் புதிய தொழில்நுட்பமான மொழிமாற்றும் கருவி பயன்படுத்தப்பட்டது. முதலமைச்சர் என்ன பேசுகிறார் என்பதை கேட்பதற்காக வெளிநாட்டினர் மொழிமாற்றும் கருவியை பயன்படுத்தி முதலமைச்சர் பேச்சை உன்னிப்பாக கவனித்தனர். 

இதையும் படியுங்கள்

கோட் சூட் போட்டு கெத்தாக வந்த ஸ்டாலின்.! தமிழகத்தில் எந்த எந்த நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடிக்கு முதலீடு.?

click me!