பிளிப்கார்ட்டில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் பொம்மை கார் வந்த அதிர்ச்சி சம்பவம்

Published : Sep 26, 2022, 11:36 AM IST
பிளிப்கார்ட்டில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்தவருக்கு பார்சலில் பொம்மை கார் வந்த அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

ட்ரோன் கேமிரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருப்பெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்த மொய்தீன் என்பவர் கடந்த 20 ஆம் தேதி ஆன்லைன் மூலம் பிளிப்கார்ட் செயலியில் ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்துள்ளார். அதன் தொகையான 79 ஆயிரத்து 64 ரூபாயை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தியுள்ளார். 

அவரது நண்பர் சுரேஷ் என்பவருக்காக அதனை வாங்கியதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் ஆர்டர் செய்த ட்ரோன் கேமிரா இன்று வந்துள்ளது. பின்னர் பார்சலை திறந்த போது அதில் குழந்தைகள் விளையாடும் பொம்மை கார் ஒன்று இருந்ததுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அதனை வீடியோவாக பதிவு செய்ததுடன், டெலிவரி செய்த நபரின் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர்.

 

மேலும் படிக்க:ஒரு வார விடுமுறைக்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கபட்டன.. காலாண்டு தேர்வு தொடங்கியது

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படும் நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு புகைப்படத்துடன் ஆன்லைன் புகார் அளித்துள்ளனர். அதற்கு பதிலளித்த நிறுவனம், இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே மேடையில் ஸ்டாலின், இ.பி.எஸ், சீமான், திருமா: சேலத்தைக் கலக்கிய வி.ஐ.பி திருமணம்; யார் இந்த திரிவேணி?
விஜய் பாணியில் அடுத்த முதல்வராகிறாரா திருமாவளவன்? இணையத்தை அதிரவைக்கும் TN 07 CM 2031 டெஸ்லா கார்!