புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டண விபரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ரயில்கள் மூலமாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு ரயில்களை இயக்கி வந்தது. பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக மதுரையிலிருந்து காசி, கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா நடத்தி வந்தது. இதன் அடுத்த கட்டமாக ஆடி அமாவாசையையொட்டி திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் கடந்த ஜூலை மாதம் சுற்றுலாவானது திருச்சியில் இருந்து துவங்கப்பட்டது. தற்போது புரட்டாசி மஹாளய அமாவாசைக்கு மதுரையிலிருந்து காசிக்கு விமான சுற்றுலாவிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!
மதுரையில் இருந்து விமான சுற்றுலா
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மதுரையிலிருந்து பல்வேறு ஆன்மீக சுற்றுலாக்களை நடத்தி வருகிறது.தற்பொழுது புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து கயா, வாரணாசி மற்றும் அலகாபாத் போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்துவதற்கான அறிவிப்பு வெளியடப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 முதல் 6 நாட்கள் சுற்றுலா நடைபெறும் என்றும் மதுரையில் இருந்து சுற்றுலா துவங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான கட்டணம் உள்ளூர் போக்குவரத்து தங்குமிடம் உணவு பயண காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 39,300 கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியைப் பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு 8287931977 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் www.irctctourism.com என்ற இணையதளம் மூலமும் பயண சீட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
அதிமுக, பாஜக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்