தமிழக மீனவர்கள் கைது...! சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்- ராமதாஸ் ஆவேசம்

By Ajmal KhanFirst Published Aug 23, 2022, 1:44 PM IST
Highlights

நாகப்பட்டினத்தை சேர்ந்த  10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுனவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியில் கட்சிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. மீனவர்களும் இலங்கை கடற்படையினரின் கைது சம்வபத்தை கண்டித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர், இந்தநிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீனவர்கள் இன்று மீன் பிடித்து கொண்டிருந்தபோது முல்லைத்தீவுபகுதியில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் மீனவர்கள் 10 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறைபிடக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். 

அதிமுக, பாஜக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்

மீனவர்களை விடுக்க நடவடிக்கை

இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேர், வங்கக்கடலில் கோடியக்கரை  அருகில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்களப் படையினரால்  சட்டவிரோதமாக துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது! தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள ஆறாவது கைது இதுவாகும். இதுவரை மொத்தம் 48 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது.  அவர்களின்  6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன! சிங்களக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் கூட, அதை சிங்கள அரசு  மதிக்கவில்லை. சிங்கள அரசின் அகங்காரத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்! கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 9 பேரையும்,  இப்போது கைது செய்யப்பட்டுள்ள  அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரையும் அவர்களின் படகுகளுடன்  மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டில் 60 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..! அதிர்ச்சியில் தொழிலதிபர்கள்

 

click me!