நீச்சல் குளத்தினிலே..! போலீஸ் வேலையைக் கவனிக்காமல் ஆட்டம் போடும் காவலர்..!கண்டிக்கத் தயங்கும் உயரதிகாரிகள்!

Published : Nov 05, 2025, 03:37 PM IST
swimming

சுருக்கம்

சதீஷ் பாண்டியனுக்கு பணியிடம் ராமநாதபுரத்தில். ஆனால், நீச்சல் பயிற்சி பெறுவதாகச் சொல்லிக்கொண்டு மதுரைக்கு வந்துவிட்டார். இங்கேயே நீதிபதி வீட்டில் வேலை பார்த்துக்கொண்டு, மதுரையிலுள்ள சில நீச்சல் குளங்களைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டார்.

மதுரையில் நீச்சல் பயிற்சி பெறுவதாகச் சொல்லிக்கொண்டு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். “சதீஷ் பாண்டியனுக்கு பணியிடம் ராமநாதபுரத்தில்தான். ஆனால், நீச்சல் பயிற்சி பெறுவதாகச் சொல்லிக்கொண்டு மதுரைக்கு வந்துவிட்டார். இங்கேயே நீதிபதி ஒருவரின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டு, மதுரையிலுள்ள சில நீச்சல் குளங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டார். லோக்கல் அமைச்சர் ஒருவரின் சமூகரீதியிலான சப்போர்ட்டும் இருப்பதால், அந்த நீச்சல் குளங்களில் அவர் வைப்பதுதான் ராஜ்ஜியம் என்றாகிவிட்டது. இஷ்டத்திற்குக் கட்டணம் விதிப்பது, பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் என எல்லை மீறிப்போய்விட்டன அவரின் அட்ராசிட்டிகள்” என்கிறார்கள் சக காக்கிகள். ‘அமைச்சரின் பெயரைச் சொல்வதால், நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்’ என்கிறது மதுரை காக்கி வட்டாரம்.

‘‘தென் மாவட்டங்களில் காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பணியில் இருக்கும் போதே, தங்கள் சொந்த தொழில்களையும் கவனித்துக்கொள்ள சென்று விடுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் முதல் நிலை காவலர் சதீசஷ பாண்டியன், மதுரையில் உள்ள என்.ஏ.எஸ். கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனெஜ்மெண்ட் எனும் தனியார் கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்தின் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். இவர் வாரத்தில் 4 நாட்கள் பணியில் இருக்கும் போதே மதுரைக்கு வந்து கல்லூரியில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு வரும் நபர்களுக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.

இதனால் காவல் நிலையத்தில் இவர் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் அப்படியே கிடக்கிறது. இதனால் மற்ற வேலைகள் எதுவும் செய்ய முடியாமல் காலதாமதம் ஆகிறது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் அவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. அதையும் மீறி விசாரித்தால் என் செல்வாக்கு என்னவென்று தெரியாமல் விளையாடுகிறீர்கள். என்னிடமே விசாரிக்கிறீர்களா? எனக்கு பெரிய அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளது. அவர்களுக்கு ஒரு போன் செய்தால் போதும் என்னிடம் விசாரணை நடத்தும் எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி கண்டிப்பாக டிரான்ஸ்பர் தான் என்று கூறி மிரட்டுகிறாராம்.

மேலும் ஒரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிட்டு என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன். நான் எது சொன்னாலும் தட்டவே மாட்டார் என்று கூறி தன்னுடன் வேலை செய்யும் காவலர்களை மிரட்டி வருகிறார். இதற்கிடையில் இவர் நீதிபதியின் வீட்டில் வேலை செய்வதால் அந்த செல்வாக்கை பயன்படுத்தி மதுரைக்கே டிரான்ஸ்பரில் வந்துள்ளார். அப்படி மதுரைக்கு வந்த அவர் மேலும் பல நீச்சல் குளங்களை கையகப்படுத்தியுள்ளார். இவருக்கு லோக்கல் விஐபியின் ஆதரவு இருப்பதால் நாளுக்கு நாள் இவருடைய அலப்பறைகள் தாங்க முடியவில்லை. அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு, தனியார் நீச்சல் குள பயிற்சியாளராக பணிபுரிவது சட்டப்படி குற்றம். இதுதெரிந்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே என்று நேர்மையான காவலர்கள் புலம்புகின்றனர்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!