
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே இரவு நேரத்தில் புறா பிடிக்க சென்றவர் மின் வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தம்மம்பட்டி அடுத்த செங்காடிநகர் பகுதியை சேர்ந்த 56 வயதாகும் கொடிவேல் என்பவர் நேற்றிரவு , கூக்கங்காட்டில் அமைந்துள்ள சங்கர் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இரவு வேளைகளில் அடைந்து இருக்கும் புறாக்களை பிடிக்க சென்றுள்ளார்.
மேலும் படிக்க:என் குழந்தையை நீன் ஏன் பார்க்க வருகிறாய்..? கத்தியால் மாறி மாறி குத்தி மோதல்.. ! வீடியோ வெளியாகி பரபரப்பு
ஆனால் தோட்டத்தில் போடப்பட்டிருந்த சோளப்பயிர்களை பன்றிகள் நாசம் செய்யாமல் இருப்பதற்காக, சங்கர் தனது வயலை சுற்றி கம்பி வேலி அமைத்து, அதில் மின்சாரம் கொடுத்து வைத்திருக்கிறார்.
நள்ளிரவு நேரம் என்பதால் இதனை கவனிக்காமல் கொடிவேல் மின்வேலி தாண்ட முயன்ற போது, அதில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தம்மம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க:இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின்சாரம் தாக்கி உயிரிழந்த கொடிவேலின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவ தொடர்பாக வழக்கு பதிந்து விவசாரி சங்கரை கைது செய்தனர்.