இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா கோரிக்கை

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 11:24 AM IST
Highlights

தமிழக அரசு நகரப் பேருந்துகளில் வழங்கப்படும் இலவசப் பயணச் சலுகையை அனைத்து பெண்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு எளிதில் செல்ல முடியாத அளவிற்கு அரசுப் பேருந்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன.

அரசுப் பேருந்துகள் கிடைக்காதக் காரணத்தால் மக்கள் தனியார் ஆமினி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அப்படி பயணிக்கும் போது அளவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தொடர்பாக அத்துறை அமைச்சரிடம் கேட்டால் தனியார் பேருந்துகள் லாப நோக்கத்திற்காக இயக்கப்படுபவை, ஆமினி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறுகிறார். இப்படி கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்?

சென்னை மாநகராட்சியில் ரூ.945 கோடி வரி வசூல்; கடந்த ஆண்டை விட 345 கோடி கூடுதல் வசூல்

மகளிருக்கான இலவசப் பயணம் குறித்த அமைச்சர் பொன்முடியின் கருத்தை கண்டிக்கிறேன். கோவை, ஈரோடு பகுதிகளில் ஒருசில பெண்கள் இலவசப் பயணம் வேண்டாம் என்று புறக்கணித்ததைப் போன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பெண்களும் இலவசப் பயணத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும். 

அண்மை காலமாக தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வாய் திறக்காமல் இருப்பது வியப்பாக உள்ளது. தேர்தலுக்கு முன்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படவில்லை என்று ஒற்றை செங்கல்லை எடுத்து வந்து உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் காட்டினார், தற்போது அவர் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை.

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சகோதரிகள் பலி; காவல்துறை விசாரணை

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!