MK STALIN : குறைந்த விலையில் 1000 முதல்வர் மருந்தகம்.! பொங்கல் முதல் அறிமுகம் - ஸ்டாலின் அதிரடி

தமிழகத்தில் மருந்துகளுக்கான செலவினைக் குறைக்கும் நோக்கில், 2025 பொங்கல் முதல் 'முதல்வர் மருந்தகம்' திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 1000 மருந்தகங்கள் திறக்கப்பட்டு, மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யப்படும்.


முதல்வர் மருந்தகம்- ஸ்டாலின் அறிவிப்பு

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய கோடியை ஏற்றிவைத்தார். இதனை தொடர்ந்து சுதந்திர தின உரையாற்றிவர், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டார். அதன் படி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளியோர் மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. குறிப்பாக நீரழிவு , இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், அதிக செலவு ஏற்படுகிறது.

Latest Videos

பொங்கல் முதல் 1000 மருந்தகம்

இதனை கருத்தில் கொண்டு, மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். 2025 ஆம் ஆண்டு பொங்கல் திருநாள் அன்று செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட மருந்தாளுநர்களுக்கும் கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானியம் அரசால் வழங்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து பேசியவர்,2026ஆம் ஆண்டு ஜனவரிக்குள் 75ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தார். கடந்த 3 ஆண்டுகளில் பல துறைகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார். 

அடி தூள்.! ஓய்வூதியம் உயர்வு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி

 

click me!