சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் முன்னாள் படை வீரர்களுக்கான புதிய திட்டம், விடுதலை போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வு மற்றும் மலைப்பகுதிகளில் இயற்கை இடர்பாடுகள் குறித்த ஆய்வு குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
சுதந்திர கொடியைற்றிய ஸ்டாலின்
சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவைத்தார். இதனை தொடர்ந்து விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், தாய்நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவ பணியில் கழித்து ஓய்வு பெற்ற முன்னாள் படை வீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடும் வகையில் முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்வதோடு, கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என கூறினார்.
undefined
தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும். விடுதலை போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.விடுதலை போராட்ட தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 11 ஆயிரம் ரூபாய் இனி 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
வயநாடு நிலச்சரிவு- குழு அமைப்பு
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி , கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏற்காடு மற்றும் ஏலகிரி உள்ளடக்கிய மலை பகுதிகள் அதிகம் உள்ளன. அங்கு பெருமழை காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வனத்துறை புவிசார் அறிவியல் துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளடக்கிய பல்துறை வல்லுனர்களை கொண்ட ஒரு குழுவினால் அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு மாநில பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக மேற்கொள்ளப்படும்.
மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவுர்ப்பதற்கும், தனிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளை குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
MK STALIN : குறைந்த விலையில் 1000 முதல்வர் மருந்தகம்.! பொங்கல் முதல் அறிமுகம் - ஸ்டாலின் அதிரடி