ஆடு மேய்க்க 6 வயது சிறுவனை ரூ.15 ஆயிரத்திற்கு விற்ற தாய்...! கிருஷ்ணகிரியில் நடந்த கொடுமை..!

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஆடு மேய்க்க 6 வயது சிறுவனை ரூ.15 ஆயிரத்திற்கு விற்ற தாய்...! கிருஷ்ணகிரியில் நடந்த கொடுமை..!

சுருக்கம்

a mother gave her child to taking care of goat in a village

ஆடு மேய்க்க  6 வயது சிறுவனை ரூ.15 ஆயிரத்திற்கு விற்ற தாய்...!  கிருஷ்ணகிரியில் நடந்த கொடுமை..!

ஆடு மேய்க்க  6 வயது சிறுவனை தன் சொந்த தாயே வேறு ஒருவருக்கு விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காவேரி இவருக்கு கோபால் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளது.

கோபாலுக்கு வயது 6. சிறு பிள்ளை என்று  கூட பாராமல் வறுமையின் காரணமாக, மூன்று  பிள்ளைகளையும் வளர்ப்பதில் சிரமம் என  நினைத்த தாய் காவேரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக மன்னன் நகரை அடுத்துள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரிடம் ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனை செய்து உள்ளார்.

பின்னர் இந்த சிறுவனை ஆடு மேய்க்க விட்டு உள்ளார்  வடிவேலு. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள்  யார் இந்த சிறுவன் ..? எதற்காக சில நாட்களாக இவ்வளவு சிறு வயதில் ஆடு மேய்க்க விட்டுள்ளனர்..? என்ற பல சந்தேகத்தோடு விசாரித்து பார்த்ததில் அந்த  சிறுவனை  எங்கிருந்தோ அழைத்து வந்துள்ளனர் என்பதை புரித்துக்கொண்டு உள்ளனர்

பின்னர் இது குறித்து, குழந்தை பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் ஆடு மேய்க்க வந்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது.

பின்னர் அந்த குழந்தையை மீட்டு தருமபுரியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பத்தில் ஒப்படைக்க அந்த ஆறு வயது குழந்தையை அதிகாரிகள் அழைத்து சென்று உள்ளனர்.

இது குறித்து சிறுவனின் பெற்றோர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

முடிந்தால் தமிழகத்தை தொட்டுப் பாருங்கள்.. அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்..!
ராமதாஸ் நடத்தியது பொதுக்குழு அல்ல; கேலிக்கூத்து.. அன்புமணி தரப்பு கே.‍பாலு விளாசல்!