ஜேசிபி வாகனத்தில் திருமண ஊர்வலம் சென்ற சேட்டன்..!  ருசிகர காரணத்தை கூறிய ஆச்சரியம்..!

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஜேசிபி வாகனத்தில் திருமண ஊர்வலம் சென்ற சேட்டன்..!  ருசிகர காரணத்தை கூறிய ஆச்சரியம்..!

சுருக்கம்

a new couples used jcb to travel in their marriage

ஜேசிபி வாகனத்தில் திருமண ஊர்வலம் சென்ற சேட்டன்..!  ருசிகர காரணத்தை கூறிய ஆச்சரியம்..!

கர்நாடக மாநிலத்தில் புதுமண தம்பதிகள் ஜேசிபி இயந்திரத்தில் திருமண ஊர்வலம் சென்ற காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளது

பெங்களூருவை சேர்ந்தவர் ஜேசிபி இயந்திரத்தை சொந்தமாக வாங்கி  இயக்கி வரும் சேட்டன். இவர் மமதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்

இவர் ஜேசிபி இயந்திரத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். தான் செய்யும் வேலையை தெய்வமாக வழிப்பட்டுவருபவர்.

பல ஆண்டு காலமாகவே, ஜேசிபி இயந்திரத்தை ஆர்வத்துடன் இயக்கி  வரும் இவர், அதன் மீது கொண்ட அக்கறை மற்றும் மரியாதை காரணமாக தன் திருமண வரவேற்பை ஜேசிபி இயந்திரத்தில் தான்  செல்ல வேண்டும் என்பதற்காக, தன் மனைவியிடம் தெரிவித்து  இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக, இயந்திரத்தின் முன் பக்கத்தில் உள்ள  தூக்கியில் அமர வைத்து, தானும் அமர்ந்து ஊர்வலாக வீடு வரைக்கும்  சென்றனர்.

இது குறித்து சேட்டன் தெரிவிக்கும் போது, "எனக்கு ஜேசிபி இயந்திரம் மிகவும் பிடிக்கும். இதுவரை என்னையும் என் குடும்பத்தையும்  காப்பாற்றி வந்தது..இனி இன்னொருவர் இணைந்துள்ளார்....என் பணி மீது எனக்கு மிகவும் மரியாதை உண்டு... நான் கஷ்டப்பட்டு வாங்கிய ஜேசிபி இது...எனக்கு அதன் மீது அதிக அன்பு உண்டு. அதனால் தான் இது போன்ற  முயற்சியில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

புதுமண தம்பதிகள் ஜேசிபி இயந்திரந்தில் திருமண ஊர்வலம் சென்றதால், இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை கண்டு நெகிந்த மக்கள் இந்த போட்டோவை வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!
125 நாள் வேலையை கொடு, கூலியை கொடு, நீ எவன் பேருன்னா வச்சுட்டு போ....! முன்னாள் அமைச்சர் வீரமணி ஓபன் டாக்