அடையாறு மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை சுமார் 5 மணி அளவில், அடையாறு மேம்பாலத்தில் (கோட்டூர் புறம் ) இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலத்தின் மேலிருந்து தண்ணீரில் விழுந்துள்ளார்.
இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்துள்ளனர்.