School Leave : புயல் வெள்ள பாதிப்பு.. சென்னையில் நாளையும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

Published : Dec 06, 2023, 01:02 PM ISTUpdated : Dec 06, 2023, 01:12 PM IST
School Leave : புயல் வெள்ள பாதிப்பு.. சென்னையில் நாளையும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

சுருக்கம்

புயல் வெள்ளம் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் நாளை சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு சார்பாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை

வடகிழக்கு பருவமழை தமிழக்த்தில் தீவிரம் அடைந்து வரும் நிலையில், வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. இந்த மழை பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருப்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. உணவு, பால் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக ஏற்கனவே இரண்டு நாட்கள் 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

இதனை தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனையடுத்து இன்னும் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையாத காரணத்தால் நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாளையும் சென்னையில் விடுமுறை

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மிக்ஜாம்' புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

வெள்ள நிவாரண பணிக்காக சென்னை வரும் போது விபத்து! உயிரிழந்த சுகாதார அலுவலர்! இரங்கல் தெரிவித்த கையோடு நிதியுதவி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. மழை அவ்வளவு தானா? டெல்டா வெதர்மேன் சொல்வது என்ன?
Tamil News Live today 09 December 2025: வேகத்தை மீறினால் ரூ.1,000 அபராதம்.. ஓட்டுநர்கள் கவனத்திற்கு.. புதிய போக்குவரத்து விதிகள்