சாலையில் கேட்பாரற்று இருந்த ரூ.2.15 லட்சம்..! கலெக்டரிடம் ஒப்படைத்த வெள்ள மனம் கொண்ட கரும்புச்சாறு வியாபாரி..!

By thenmozhi gFirst Published Sep 7, 2018, 4:09 PM IST
Highlights

சாலையில் கேட்பாரற்று இருந்த ரூ.2.15 லட்சம் ரூபாயை கரும்புச்சாறு வியாபாரி ஒருவர், கலெக்டரிம் ஒப்படைத்த சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. 

சாலையில் கேட்பாரற்று இருந்த ரூ.2.15 லட்சம் ரூபாயை கரும்புச்சாறு வியாபாரி ஒருவர், கலெக்டரிம் ஒப்படைத்த சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது. 

பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் சாலையில் கரும்புச்சாறு விற்பனை கடையை நடத்தி வருபவர் ஆயிரம். இவர் அருகில் உள்ள திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர். கடந்த 4 ஆம் தேதி முன்பு இவரது கடை முன்பு, இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள், தனது பையை தவற விட்டு சென்றுள்ளனர்.அந்த பையில் ரூ.2.15 லட்சம் மற்றும் திருமண அழைப்பிதழ்கள் இருந்தன. 

இதனைப் பார்த்த கரும்புச்சாறு வியாபாரி ஆயிரம், பையை தவற விட்டவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தார். ஆனால், அந்த பைக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை.இதையடுத்து ஆயிரம், அந்த பணப்பையை நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து நடந்தவற்றை கூறினார். 

கரும்புச்சாறு வியபாரியின் நேர்மையைப் பாராட்டி கௌரவித்தார் ஆட்சியர் ஷில்பா.பண பையை தவறவிட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தியதில் பிராஞ்சேரி சித்தன்பச்சேரியைச் சேர்ந்த பெருமாள் என்பது தெரிய வந்தது. தவறவிட்ட பணம் அவரது சகோதரரின் இல்ல திருமணத்துக்காக சேர்த்து வைத்த பணம் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து ரூ.2.15 லட்சம் மற்றும் அழைப்பிதழ்கள், பெருமாளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைப் பெற்றுக் கொண்ட பெருமாள், ஆட்சியர் மற்றும் கரும்புச்சாறு வியாபாரிக்கும் நன்றி கூறினார்.

click me!