136 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை..! இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By Ajmal KhanFirst Published Nov 9, 2022, 12:04 PM IST
Highlights

வட கிழக்கு பருவமழை தீவரம் அடைந்துள்ளநிலையில், முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில் இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

முல்லை பெரியாறு- நீர்வரத்து அதிகரிப்பு

தேனி,மதுரை,திண்டுக்கல், சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீரை வழங்குவதில் முல்லைப் பெரியாறு அணை முக்கிய பங்காக உள்ளது.  கடந்த மாத துவக்கத்தில் மழை இல்லாததாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து வந்தது.

உஷாரான திமுக.. இந்த முறை பொங்கல் தொகுப்பு கிடையாது.. அதுக்கு பதில் ரூ.1000 வழங்க முடிவு.!

வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த நிலையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைபெரியாறு அணை நேற்று இரவு 10 மணிக்கு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதைக் தொடர்ந்து, தமிழக பொதுப்பணித்துறையின் சார்பாக இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டும் போது இரண்டாவது கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும். தற்போது முல்லைப் பெரியார் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 2274 கனஅடியாக உள்ளது.  அணையிலிருந்து வினாடிக்கு 511 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் சப்பாத்து, வண்டிப்பெரியாறு வழியாக செல்வதால் அப்பகுதி மக்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வங்க கடலில் புதிய புயல் சின்னம்..! நாளை முதல் மிக கன மழை..! எந்த எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை என தெரியுமா.?

click me!