வங்க கடலில் புதிய புயல் சின்னம்..! நாளை முதல் மிக கன மழை..! எந்த எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை என தெரியுமா.?

By Ajmal KhanFirst Published Nov 9, 2022, 10:25 AM IST
Highlights

வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கன மழை

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்தது. இதனையடுத்து கடந்த ஓரிரு நாட்கள் மழையானது சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மிக கன மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கிலோமீட்டர் உயரத்திற்கு  வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது.இது அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் 11ஆம் தேதி தமிழகம் புதுவை இடையே கடற்கரையை நெருங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 இடங்களில் மண்டல மாநாடு..? தொண்டர்களை திரட்டி இபிஎஸ்க்கு அதிர்ச்சி அளிக்க திட்டம் தீட்டிய ஓபிஎஸ்

வட தமிழகத்தில் மிக கன மழை

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மிதமான மழையும் , நாளை கனமழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் 11ஆம் தேதி முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10 செமீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுந்த தாழ்வு பகுதி புயலாக உருமாற வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதும் காற்றின் வேகத்தை பொறுத்தே புயலாக உருமாற வாய்ப்பு உள்ளதா என தொடர்ந்து கண்காணித்து வருவதாக  வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்க வேண்டும்..! குடியரசு தலைவரிடம் எம்பிக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒப்படைப்பு

click me!