லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் உயிரிழப்பு!

By Manikanda Prabu  |  First Published May 27, 2024, 12:50 PM IST

லேப்டாப்பில் சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


கோவை சேர்ந்த பெண் மருத்துவர் சரணிதா. இவர் ஒரு மாத பயிற்சிக்காக சென்னை வந்துள்ளார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் பயிற்சி பெற வந்த இவர், அயனாவரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்து தனது பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், பெண் மருத்துவர் சரணிதா தனது விடுதி அறையில் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்ற போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

அவரது உடலை கைப்பற்றியபோது, சார்ஜரை கையில் பிடித்தபடியே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. லேப்டாப்பில் சார்ஜ் போடும் போதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாவட்டங்களில் சுட்டெரிக்க போகும் வெயில்: தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!

இதுகுறித்து பெண் மருத்துவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அயனாவரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!