நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்..! தேசிய மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்

Published : Jun 15, 2022, 12:09 PM IST
நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்..! தேசிய மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்

சுருக்கம்

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்ற இடத்தில் மனித உரிமை மீறப்பட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா திருமண சர்ச்சை

நடிகை நயன்தாராவும்- இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதனையடுத்து இவர்களது திருமணம் ஆடம்பரமாக கடந்த 9 ஆம் தேதி ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வு உரிமை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. திருமணம் நடைபெறும் இடத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். திருமண அழைப்பிதழில் பார் கோடு ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.  மேலும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக அந்த விடுதிக்கு வெளியில் உள்ள சாலையில் கூட பொதுமக்களையும், பத்திரிக்கையாளரையும் அனுமதிக்க மறுக்கப்பட்டனர். 

மனித உரிமை ஆணையத்தில் புகார்

நட்சத்திர விடுதியின் பின்புறமுள்ள கடற்கரை பகுதிக்கு கூட பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் தனியார் பாதுகாவலரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில்  தேசிய மனித உரிமை ஆணையத்தில் சமூக ஆர்வலர் சரவணன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடற்கரை என்பது பொதுவான இடம் அந்த இடத்தில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த இடத்திற்குள் பொதுமக்களை அனுமதிக்காதது மனித உரிமையை மீறிய செயல் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!