இனி இவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு !

By Raghupati RFirst Published Jun 15, 2022, 11:45 AM IST
Highlights

கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அப்போது அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் அமர்வுப்படித் தொகை பத்து மடங்காகவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று அப்போது அறிவித்தார்.

அதன்படி கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு மட்டும் அமர்வுப்படி உயர்த்தி வழங்கப்பட்டது எனவும், மற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உயர்த்தப்படவில்லை எனவும், பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த அமர்வுப்படியினை உயர்த்தி வழங்கக்கோரி வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது வழங்கப்படும் அமர்வுப்படியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அண்ணாமலை பொதுவெளியில் பேச கூடாது.. ஐஜிக்கு பறந்த புகார் - விரைவில் கைதாகிறாரா அண்ணாமலை ?

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு கூட்டங்களில் கலந்து கொள்ளும் நாட்களில் மாதம் ஒன்றிற்கு ஒரு முறை மட்டும் அமர்வுப்படித் தொகையினை பத்து மடங்காக உயர்த்தி வழங்கிடவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ஒரு முறை மட்டும் அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், அமர்வுத் தொகை உயர்த்தி வழங்குவதன் காரணமாக தமிழகத்திலுள்ள 12,525 கிராம ஊராட்சித் தலைவர்கள், 99,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் மற்றும் 655 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1.19 இலட்சம் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பயன்பெறுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மேலிடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு..டெல்லிக்கு பறக்கும் ஆளுநர் - பின்னணி காரணம் இதுவா ?

click me!