செய்யது பீடி ரெய்டு... பின்னனி என்ன?

 |  First Published Jun 28, 2017, 1:12 PM IST
a brief story about raid in seyadu beedi



சென்னை மற்றும் தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவிலும் பெரிய அளவில் விற்பனையாவது செய்யது பீடி நிறுவனம் ஆகும். இந்தியா முழுதும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானத்தை குறைத்து காட்டியதாக கூறி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் இறங்கியுள்ளனர். 

1940 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பித்த நிறுவனம் பிறகு தமிழகத்தில்  நெல்லை சிந்து பூந்துறையில் சிறிய அளவில் துவக்கப்பட்டது. செய்யது ராவுத்தர் என்பவரால் துவக்கப்பட்ட நிறுவனம் இன்று தமிழகத்தை தாண்டி ஆந்திரா , கர்நாடகா,  கேரளா , சட்டிஸ்கர்  என பல மாநிலங்களில் வியாபித்துள்ளது.

Latest Videos

undefined

பீடி தொழில் மட்டுமல்லாமல் , பஞ்சாலை , செய்யது சரியத் பைனான்ஸ் நிறுவனம்  , ஸ்பின்னிங் மில் , ரெசிடென்சியல் பள்ளி , மழலையர் பள்ளி , புத்தக நிறுவனம் என பல தொழில்களிலும் கொடி கட்டி பறக்கின்றனர். 

தற்போது இந்த நிறுவனங்களை செய்யது அப்துல் சலீம் , சித்தாரா சலீம் , மற்றும் அவரது மகன் யூசுப் மீரான் ஆகியோர் நிர்வாகித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கில் பணம் புரளும் இந்த நிறுவனங்களை நிர்வாகித்து வரும் இவர்கள் வருமானத்தை குறைத்து காட்டியதாக வந்த புகாரை அடுத்து மொத்தம் 40 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. 

தமிழகத்தில் 18 இடங்களிலும் சென்னையில் பெல்ஸ் சாலையில் உள்ள நிறுவனம் , பட்டினப்பாக்கத்தில் உள்ள வீடு சாத்தாங்காட்டில் உள்ள நிறுவனம் உள்ளிட்ட 3 இடங்கள் , மற்றும் தமிழகம் முழுதும் உள்ள நிறுவனங்கள் , கொடவுன் , கல்வி நிறுவனம் , ஸ்பின்னிங் மில் , இபைனான்ஸ் நிறுவனம் , பஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடக்கிறது.

இந்த சோதனையில் விற்பனை , வருவாய் , முதலீடு  உள்ளிட்ட ஆவணங்களை சோதனையிடுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட  அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் இறுதியில் தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி தெரிய வரும். 

click me!