ஆன்-லைன் மூலம் மணல் விற்பனை - தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி…

First Published Jun 28, 2017, 10:58 AM IST
Highlights
Sand sales at online - tamilnadu online sand services launched by edappadi


மணல் தட்டுப்பாட்டை நீக்கவும், கட்டுமானப் பணிகளை ஊக்குவிக்கவும், ஆன்-லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு மணல் இணைய சேவை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

தமிழக அரசு, கடந் மே மாதம் முதல், நேரடி மணல் விற்பனையில் ஈடுபட்டு உள்ளது. அதனால், மாநிலம் முழுவதும், 75 குவாரிகளை திறக்க திட்டமிடப்பட்டு, முறையான அனுமதி பெற்று, 30 குவாரிகள் திறக்கப்பட்டன. 

பொதுப்பணித் துறையில் போதிய ஆட்கள் இல்லாததாலும், உள்ளூர் மக்கள் எதிர்ப்பாலும், தற்போது, 15 குவாரிகள் மட்டுமே இயங்குகின் றன. 

இவற்றில் இருந்து, தினமும், 5,000 லோடு மணல் மட்டுமே அள்ளப்படுகிறது.மாநிலம் முழுவதும் நடக்கும், புதிய கட்டுமான பணிகளுக்கு, தினமும், 40 ஆயிரம் லோடு மணல் தேவை என்பதால், தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. 

இதனால், 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட, இரண்டு யூனிட் மணல், தற்போது, 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. மணல் தட்டுப்பாட்டால், கடந்த மூன்று மாதங்களாக கட்டுமான பணிகள் முடங்கி உள்ளன. 

இந்நிலையில் மணல் தட்டுப்பாட்டை நீக்கவும், கட்டுமானப் பணிகளை ஊக்குவிக்கவும், ஆன்-லைன் மூலம் மணல் விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு மணல் இணைய சேவை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர், ஆன்-லைன் மூலம் மணல் ஆர்டர் கொடுத்தால், உடனடியாக மணல் சப்ளை செய்யப்படும் என தெரிவித்தார். 
மேலும் செல்போன் மூலம் மணல் ஆர்டர் கொடுக்கும் வகையில் புதிய ஆப் ஒன்றையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
 

click me!