கிராம வங்கியில் 200 சவரன் தங்க நகைகள் கையாடல்.. மாயமான வங்கி மேலாளர்.. பொதுமக்கள் போராட்டம்..

By Thanalakshmi VFirst Published Oct 7, 2022, 11:08 AM IST
Highlights

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளயம் அருகே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளயம் அருகே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.டி.ஜி.புதூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கிராம வங்கியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். 

இந்நிலையில் வங்கியில் நடைபெற்ற தணிக்கையில் பல நகைகள் காணமால் போனது தெரியவந்துள்ளது. மேலும் வங்கி மேலாளர் மணிகண்டன் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்துள்ளார். நகைகளுடன் மேலாளர் மாயமானதையடுத்து, ஈரோடு குற்றப்பிரிவு போலீசாருக்கு வங்கி நிர்வாக சார்பில் புகாரளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க:குன்றத்தூரில் தந்தை, மகன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை

இந்த தகவலை அறிந்த வாடிக்கையாளர்கள், வங்கி முன் கூடி முற்றுக்கை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காணமால் போன தங்களுடைய தங்க நகைகளை எந்த சேதாரமும் இல்லாமல் மீட்க தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம், பங்களாபுதூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். 

வங்கியில் அடமானம் வைத்திருந்த 14 வாடிக்கையாளரின் 1,932 பாக்கெட்டுகளில் இருந்த சுமார் 200 சவரன் தங்க நகைகளை எடுத்து, வேறு வங்கியில் அடமானம் வைத்து மேலாளர் மணிகண்டன் பணம் பெற்றுள்ளார் என்று கிராம வங்கிகளின் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க:பள்ளிக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லி காரில் வைத்து அடிக்கடி பலாத்காரம்.. 8 மாதம் கர்ப்பத்தால் அதிர்ச்சி.!

மேலும் பேசிய அவர், நகைகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், மக்கள் யாரும் பதற்றம் கொள்ள தேவையில்லை. அனைத்து நகைகளும் மீட்கப்பட்டு விரைவில் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார். இதனிடையே கிராம வங்கியில் அடமானம் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகளை கையாடல் செய்த வங்கி மேலாளர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

click me!