10 மாவட்டங்களில் 494 கஞ்சா வழக்குகள்... 813 வங்கி கணக்குகள் முடக்கம்!!

By Narendran SFirst Published May 30, 2022, 4:42 PM IST
Highlights

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 90 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதி விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. அதன்படி விருதுநகர் 76 கஞ்சா வழக்கில் 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 கஞ்சா வழக்கில் 116 வங்கி கணக்குகளும், தேனியில் 81 கஞ்சா வழக்குகளில் 146 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 வங்கி கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கி கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் 22 வழக்குகளில் 36 வங்கி கணக்குகளும், குமரியில் 59 வழக்குகளில் 91 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கஞ்சா கடத்தல், விற்பனைக்கு கைது நடவடிக்கை மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கி கணக்கும் முடக்கப்படும் எனவும் தென்மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க ஆபரேஷன் கஞ்சா 2.0 தொடங்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா வேட்டையில் ஏற்கனவே 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுபோல் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மேலும் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

click me!