நேற்று இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது.
கோவை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கியதும் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கிவிடும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் தொடங்கிவிட்டது. படிப்படியாக அதிகரித்து வந்த வெயில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து சேலம், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கு பயந்து வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.
இதையும் படிங்க: என் கணவரை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க! என்னுடைய சாவுக்கு இவங்க தான் காரணம்! சிக்கியது கடிதம்!
நேற்று இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. இந்நிலையில், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Today Gold Rate in Chennai: நேற்று ரூ.1,160 குறைந்த தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன? உயர்ந்ததா? குறைந்ததா?
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் கோவை, கரூர், சேலம் உள்ளிட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.