Tasmac Sale: தீபாவளி திருநாளில் மதுப் பிரியர்கள் உற்சாகம்.! எத்தனை கோடிக்கு விற்பனை.? எந்த மாவட்டம் முதலிடம் ?

By Ajmal KhanFirst Published Oct 25, 2022, 9:42 AM IST
Highlights

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி, தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களில், ரூ. 708 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வருவாயை அதிகளவு ஈட்டித்தரும் துறையாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. அந்தளவிற்கு மது விற்பனையானது செய்யப்பட்டு வருகிறது. அதுவும் பண்டிகை காலங்கள் என்றால் கேட்கவா வேண்டும் பல நூறு கோடியை தமிழக அரசுக்கு வருவாயை ஈட்டிக் கொடுத்துள்ளது. அந்தவகையில் தீபாவளி கொண்டாடும் மக்களில் ஒரு தரப்பினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இதனால், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை ஒட்டிய நாட்களில், 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது விற்பனை களைகட்டும்.  கடந்தாண்டு தீபாவளியை தினத்தையொட்டி  நவம்பர் 3 மற்றும் 4ம் தேதி ஆகிய 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது நடைபெற்றது.

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பிற்கும் தொடர்பா..? வெளியான அதிர்ச்சி தகவல்கள்

அதன்படி, இந்த ஆண்டு சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையான நேற்றுடன் சேர்த்து மூன்று நாட்களில், ரூ.708 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், 244.08 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, நேற்று மட்டும் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.52.87 கோடிக்கு மது விற்பனை நடை பெற்றுள்ளது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் ரூ.49.21 கோடிக்கும், சென்னையில் ரூ.48.80 கோடிக்கும், திருச்சியில் ரூ.47.78 கோடிக்கும், கோவையில் ரூ.45.42 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

வலுவடையும் சிட்ராங் புயல்.. மேற்கு வங்கம், ஒடிசாவில் கனமழை எச்சரிக்கை..! தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை?

 

click me!