கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எத்தனை பேருந்துகள் தெரியுமா.?

By Ajmal Khan  |  First Published Dec 22, 2022, 1:57 PM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.


கிறிஸ்துமஸ் விழா- சிறப்பு பேருந்து

கொரோனா தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகை  வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதே போல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறையும் நாளை முதல் விடப்படவுள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்ல முடிவு செய்துள்ளனர். எனவே பொதுமக்கள் அதிக அளவில் வெளியூர் செல்லக்கூடும் என்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Latest Videos

உதயநிதி நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்கீட்டில் சர்ச்சை..! அதிருப்தி தெரிவித்த ஒலிம்பிக் சாம்பியன்

 600 சிறப்பு பேருந்கள் இயக்கம்

அதன்படி வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுவதாகவும் அதேபோல் சனிக்கிழமையும் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு மீண்டும் வருவதற்கும் போதுமான பேருந்துகள் இயக்க தயாராக உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமுகவின் பி டீம் ஓபிஎஸ்.. அவங்க மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! ஜெயக்குமார்

click me!