சென்னை பூங்கா ரயில் நிலையம் எந்நேரமும் பயணிகள் நிறைந்து கூட்டமாக பரபரப்பாக காணப்படுவது வழக்கம். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் தாம்பரம் மார்க்கமாக செல்லக்கூடிய பூங்கா ரயில் நிலையத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பூங்கா ரயில் நிலையம் எந்நேரமும் பயணிகள் நிறைந்து கூட்டமாக பரபரப்பாக காணப்படுவது வழக்கம். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் தாம்பரம் மார்க்கமாக செல்லக்கூடிய பூங்கா ரயில் நிலையத்தை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஃபுல் மப்பில் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த போதே துண்டித்த காதலி.. விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபரீத முடிவு.!
இந்நிலையில், நேற்று பிற்பகலில் செங்கல்பட்டு பகுதியில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஒரு இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், இளம்பெண்ணின் உடல் பாகங்கள் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்ட படியே ஓடினர். உடனே இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தியதில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமாவதி(28) என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும், ஹேமாவதி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அருகே தனது தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தினமும் மின்சார ரயில் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்து சென்றது தெரியவந்தது. இவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- தலைவா! அதிமுக சிதறி கிடக்கிறது; நாங்கள் பதறி துடிக்கிறோம்.. வைரலாகும் அன்வர் ராஜா போஸ்டர்..!