ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேர் பணியிட மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

Published : Jun 05, 2022, 04:10 PM IST
ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேர் பணியிட மாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

சுருக்கம்

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 7 மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர், திண்டுக்கல், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை எஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் எஸ்பியாக சுந்தரவதனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை எஸ்பியாக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் எஸ்பியாக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவாரூர் எஸ்பியாக சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் எஸ்பியாக தங்கதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் எஸ்பியாக பி.சி.கல்யாண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டலா ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய மண்டல ஐஜியாக சந்தோஷ் குமார் நியமனம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்பு பட்டியலில் இருந்த கண்ணன் ஆயுதப்படை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சைபர் கிரைம் துணை ஆணையர் பதவி மத்திய குற்றப்பிரிவில் உருவாக்கப்பட்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்