திருப்பூரில் பிடிப்பட்டது 4200 லிட்டர் கலப்பட எண்ணெய்; பேரு, ஊரு எதுவும் இல்லாமல் மக்களுக்கு விநியோகம்... 

Asianet News Tamil  
Published : Jun 22, 2018, 11:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
திருப்பூரில் பிடிப்பட்டது 4200 லிட்டர் கலப்பட எண்ணெய்; பேரு, ஊரு எதுவும் இல்லாமல் மக்களுக்கு விநியோகம்... 

சுருக்கம்

4200 liters of oil was caught in Tirupur distributed to the people without name and address

திருப்பூர்

திருப்பூரில் வாகன சோதனையின்போது வேனில் கொண்டுவரப்பட்ட 4200 லிட்டர் கலப்பட எண்ணெயை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக இயங்கிவந்த கலப்பட எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தை அதிகாரிகள் கண்டறிந்து அந்த நிறுவனத்தில் இருந்த 2000 லிட்டர் கலப்பட எண்ணெயை பறிமுதல் செய்தனர். 

இதேபோள அவினாசியில் இயங்கிவந்த கலப்பட எண்ணெய் நிறுவனத்திலும் அதிரடியாக சோதனை நடத்திய 4500 லிட்டர் கலப்பட எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் திருப்பூர் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விஜயராஜா, ரவி ஆகியோர் உணவு பொருள் கலப்படம் குறித்து பல்வேறு பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர்..

வாகனங்களில் ஏதேனும் கலப்பட உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்று இவர்கள் மூவரும் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் இருந்து சோமனூர் செல்லும் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் முதல் அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வந்த வேன் ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். 

இதில் அந்த வேனில் "ஓம் கணபதி கடலை எண்ணெய்" என்ற பெயர் அச்சிடப்பட்ட எண்ணெய் பாக்கெட்டுகள் இருந்தன. இதனை எடுத்து உடைத்து சோதனை செய்தனர். அதில் பாமாயில் இருந்தது தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் பாக்கெட்டுகளாக இருந்த 1800 லிட்டர் கலப்பட எண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 இலட்சத்து 20 ஆயிரம்.

அதன்பின்னர், ருக்கிகோல்டு பாமாயில் பாக்கெட்டுகளில் எண்ணெய் தயாரிக்கப்பட்ட தேதி, முழு முகவரி, உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்டவை இல்லை. இதனைத் தொடர்ந்து 2400 லிட்டர் பாமாயில் எண்ணெய் பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.1 இலட்சத்து 90 ஆயிரம் ஆகும்.

இதைத்தொடர்ந்து வேனில் வந்த நால்வரையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அவர்கள் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த குமரேசன் (35), மகேஷ் (19), மற்றும் லோடு மேன்களான குருசாமி (35), வீராசாமி (28) என்பது தெரியவந்தது. 

மேலும், கோவை மாவட்டம், அன்னூர் ஏ.எம்.காலனியில் கதவு எண் 3/4டி ராஜீவ் வீதி என்ற முகவரியில் செயல்பட்டு வரும் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த எண்ணெயை ஏற்றிவந்து திருப்பூரில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அதன்பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் வேனை திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 28 December 2025: புஷ்பா 2 நெரிசல் வழக்கில் திடீர் ட்விஸ்ட்... 11வது குற்றவாளியாக அல்லு அர்ஜுன் பெயர் சேர்ப்பு
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி