நிகழாண்டில் மட்டும் 40 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு.. இதுவரை 199 சிலைகள் மீட்பு

By Thanalakshmi VFirst Published Oct 19, 2022, 11:41 AM IST
Highlights

தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை பதிவான 40 சிலை கடத்தல் வழக்குகளில் 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 199 சிலைகள் மற்றும் கலை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் பிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார்.
 

நெல்லை வந்த தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி தினகரன் நெல்லை சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையுடன் மாவட்டத்தில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் நெல்லையப்பர் கோவிலில் உள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்தார். 

சிசிடிவி பாதுகாப்பு  மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணி குறித்து கேட்டறிந்தார். மேலும் சிலைகளை கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் படிக்க:Diwali: மக்களே அலர்ட் !! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. எங்கெங்கு தெரியுமா..?

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர் கூறியிருப்பதாகவது ,”இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 199 சிலைகள் மற்றும் கலை அலங்கார பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியங்களில் 60 க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. அதில் அமெரிக்காவில் 37 சிலைகளும், சிங்கப்பூரில் 15 சிலைகளும் உள்ளதாக தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனை மீட்டு தமிழகத்திற்கு  கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மேட்டூர் அணையின் நீர்வரத்து மளமளவென குறைவு.. இன்றைய நிலவரம்..

அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிலை கடத்தல் முக்கிய  குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூரின் வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்று தெரிவித்தார்.

click me!