ஊத்தங்கரை அருகே 11 வயது சிறுவன் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே 11 வயது சிறுவன் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்யும் வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கவுண்டப்பனூர் கிராமத்தில் 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு, 2 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் சிறுவன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுவன் கவுண்டப்பனூர் ஆற்று ஓரத்தில் உள்ள கொட்டகையில் மதுபானம் விற்கும் விற்று வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலானது.
இதையும் படிங்க;- சினிமாவை மிஞ்சிய விபத்து.. அந்தரத்தில் பறந்து தலைப்புற கவிழ்ந்த கார்.. அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி.!
இதுதொடர்பாக போலீசார் விசாரித்த போது சிறுவனின் தந்தை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அந்த சிறுவனின் தாய் மற்றும் அவரது சகோதரருடன் தங்கியிருந்துள்ளார். அவரது தாயார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மதுபானம் விற்றதற்காக கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
தற்போது தனது குடும்பத்தினருடன் ஆந்திராவின் குப்பத்தில் உள்ள சிறுவனின் பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தையும் தாயும் ஊர் திரும்பியதும் இதுதொடர்பாக அவர்களிடம் விசாரிக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க;- ஜெ. இறந்த தேதியில் கோல்மால்.. அம்பலப்படுத்திய ஆறுமுகசாமி ஆணையம்.. தவறுக்கு மேல் தவறு செய்த சின்னம்மா.?