கிருஷ்ணகிரி அருகே நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் மீது கார் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் மீது கார் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்ன பர்கூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (38). இவர் நண்பர்களான பாக்கியராஜ்(40), சுஜித்குமார்(39), கண்டவீரவேல்(35) ஆகியோருடன் தினமும் மாலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், நண்பர்கள் 4 பேரும் சென்னை கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அங்கிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த கார் சாலை ஓரமாக நடந்து சென்ற 4 பேர் மீதும் பயங்கரமாக மோதிவிட்டு பள்ளத்தில் இறங்கியது.
இதையும் படிங்க;- பேருந்து மீது அசுர வேகத்தில் மோதிய கார்!தூக்கி வீசப்பட்ட இன்ஜின்!சிதறிய 4 பேர் உடல்கள்! கலங்க வைக்கும் சம்பவம்
இதில், தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த பாக்கியராஜ், சுஜித்குமார், கண்ட வீரவேல் ஆகிய 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகதீசனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதையும் படிங்க;- கையில் வாழைப்பழத்துடன் செஸ் போட்டிக்கு வரும் பிரக்ஞானந்தா.. என்ன காரணம் தெரியுமா? ரகசியத்தை கூறும் பெற்றோர்.!
காரை ஓட்டி வந்தவர் ஓசூரைச் சேர்ந்த தணிகைமலை(40) என்பதும் பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் நபர்களை அழைத்து செல்ல வேலூரில் இருந்து காரை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடைபயிற்சி சென்ற போது நண்பர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- தரையில் கிடந்த ஸ்ரீமதியின் உடல்.. 4 பேர் தூக்கி செல்லும் புதிய சிசிடிவி வீடியோ காட்சி..!