கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்..! 4 பேர் திடீர் மாயம்..! தேடும் பணியில் கடலோர காவல் படை

Published : Jan 06, 2023, 09:29 AM IST
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்..!  4 பேர் திடீர் மாயம்..! தேடும் பணியில் கடலோர காவல் படை

சுருக்கம்

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மண்டபம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் மீனவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கடற்கரை கிராமங்கள் உள்ளன ராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காள் மடம், மண்டபம், தொண்டி என பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்வார்கள் அந்த வகையில் நேற்று முன் தினம் காலை மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று காலை வரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. மண்டபம் கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து,  ஜெயராஜ் மகன் ஆல்வின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் முருகானந்தம் (45), கண்ணன் (40), கோவிந்தசாமி (50), ஜான் (30) ஆகியோர் நேற்று முன்தினம் காலை தொழிலுக்குச் சென்றனர். ஆனால் இன்று காலை வரை மீனவர்கள் கரைக்கு திரும்பி வரவில்லையென கூறப்படுகிறது.

அண்ணாமலையில் நாகரீகமற்ற செயல்..! அவராக‌ திருந்தவில்லை..!அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?-சிபிஎம்

4 மீனவர்கள் மாயம்

இதனால் அச்சமடைந்த சக மீனவர்கள் மாயமான மீனவர்களை தேடி நேற்று கடலுக்குள் சென்றனர் அவர்களும் நீண்ட தூரம் கடலுக்குள் சென்று பார்த்த நிலையில் மீனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத  நிலையில் கரை திரும்பினர். இதனையடுத்து மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு உள்ளனர். படகு பழுதாகி காற்றின் போக்கிற்கு ஏற்ப இலங்கை கடற் பகுதிக்கு படகு சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருந்த போதும் மீனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத காரணத்தால் மீனவர்கள் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்

இதையும் படியுங்கள்

புத்தகப் பிரியர்களே தயாரா.? சென்னையில் இன்று தொடங்குகிறது புத்தக கண்காட்சி..! எத்தனை நாட்கள் நடைபெறுகிறது.?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தேர்தல் நேரத்தில் மடிக்கணினி..? முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய நயினார்..!
பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை..! ONGC சொத்துகள் சேதம்.. விவசாய சங்க தலைவருக்கு நீதிமன்றம் அதிரடி