டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றுங்கள்... தமிழக அரசுக்கு மதுரைக்கிளை அறிவுறுத்தல்!!

Published : Jan 05, 2023, 09:19 PM IST
டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றுங்கள்... தமிழக அரசுக்கு மதுரைக்கிளை அறிவுறுத்தல்!!

சுருக்கம்

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவரும் மதுரையை சேர்ந்தவரும் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், டாஸ்மாக் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும், மாணவர்களுக்கு மது விற்பதை தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தைரியம் இருந்தால் திமுக தனித்து நிற்கட்டும்… சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி!!

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஆனால் ஒரு சில பரிந்துரைகளை வழங்கலாம் என்று தெரிவித்தனர். அதன்படி தமிழக மக்களின் நலன்கருதி டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை நண்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை நேரத்தை குறைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க: உரிமையாளரை தாக்கிவிட்டு காரை கொள்ளையடித்த கும்பல்… தாறுமாறாக ஓட்டி மக்கள் மீது மோதும் சிசிடிவி காட்சி!!

மேலும் மதுபாட்டிலில் விலை இடம்பெற வேண்டும், மதுவிற்பவர்கள், வாங்குபவர்களுக்கு போலீசார் உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்ய வேண்டும், மதுபானம் வாங்க, விற்க, உபயோகப்படுத்த, உரிமம் உள்ளவர்களுக்கு மட்டுமே என விதிமுறைகளை உருவாக்க வேண்டும், மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும், டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அடுத்த 3 மணிநேரம் உஷார்! டெல்டாவில் அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை! வானிலை மையம் அலர்ட்!
மதுரை விழிப்புடன் இருக்கும் மண்.. கோயில் நகரம் தொழில் நகராகவும் மாறணும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!