
மாரடைப்பால் மரணமடைந்த காங். எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் உடல் ஈரோடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாசக் கோளாறு காரணமாக தனது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு மூச்சு திணறலுடன் மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பிரமிப்பை ஏற்படுத்திய பழங்கால கார் மற்றும் பைக் கண்காட்சி!!
இதை அடுத்து மாரடைப்பால் நேற்று அவர் காலமானார். இதை அடுத்து அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: மீன் வண்டியில் 200 கிலோ கஞ்சா: மடக்கிப் பிடித்த கோவை போலீஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, அவரது உடலுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதேபோல் அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், முத்துச்சாமி, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், காந்தி, மதிவேந்தன, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் திருமகன் ஈவெரா உடல் இன்று ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.