Erode: இந்தியாவில் முதல்முறை! தமிழகத்தில் ‘மொபைல் மின்தகன வாகனம்’ அறிமுகம்: எங்கு தெரியுமா?

By Pothy Raj  |  First Published Dec 19, 2022, 11:53 AM IST

இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் மொபைல் மின்தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவிலேயே முதல்முறையாக, தமிழகத்தில் மொபைல் மின்தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வேறு எந்த மாநிலத்திலும் மொபைல் எரியூட்டும் வாகனம் ஏதும் இல்லாத நிலையில் தமிழகத்தில் ஈரோடு நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி கிளப் சார்பில் இந்த மொபைல் எலெக்ட்ரிக் எரியூட்டும் வாகனத்தை அமைக்துள்ளார். மனித உடல்களை எரியூட்டும்போது ஏற்படும் செலவைக் குறைக்கும் வகையில் இந்த வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மணல் கொள்ளை தொடர்பாக சுவரொட்டி.! கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவரின் மகன்- தட்டி தூக்கிய போலீஸ்

ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி கிளப்பின் கீழ் இயங்கும் ஆத்மா அறக்கட்டளையின் செயலாளர் வி.கே.ராஜமாணிக்கம நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ஈரோடு நகரில் யாரேனும் உயிரிழந்தால், அவர்களை எரியூட்டும் செலவு அதிகமாகஇருக்கிறது, அதாவது ரூ.15ஆயிரம் வரை ஒரு உடலுக்கு செலவாகிறது.

இதில் ரூ.3500யாக இருந்த எரியூட்டுமையக் கட்டணம் தற்போது ரூ.4500ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்துதான் மொபைல் எரியூட்டும் வாகனத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

மொபைல் மின்னணு எரியூட்டும் வாகனத்தில் ஒருஉடலை எரியூட்ட ரூ.7500 மட்டும்தான் செலவாகும்.வழக்கமான மின்ணு எரியூட்டும் மையத்தில் ஆகும் செலவைவிட பாதியளவுதான் செலவாகும். 

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இதற்கு தடை.. வெளியான அதிரடி சரவெடி உத்தரவு..!

மின்னணு எரியூட்டும் வாகனத்துக்கான பாகங்கள் கேரளாவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. இதில் ஆம்புலன்ஸ், ஜெனரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பாகங்களும் அடங்கும். தமிழக அரசு உதவியுடன் இந்த மொபைல் மின்னணு எரியூட்டும் வாகனத்தை மக்களுக்காக ரோட்டரி சங்கம் வழங்க உள்ளது”எனத் தெரிவித்தார்.

இந்த மொபைல் மின்னணு உடல்எரியூட்டும் வாகனம் பயன்பாட்டுக்கு வந்தால், எரியூட்டும் செலவு பாதியாகக் குறையும் என்று சமூக ஆர்வலர் ஆர். வேலுசாமி தெரிவித்தார்


 

click me!