ஈரோடு அருகே மின்கம்பத்தில் சாய்ந்து போன் பேசிய நபர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு அருகே மின்கம்பத்தில் சாய்ந்து போன் பேசிய நபர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் தறிப்பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆறு மாதங்களாக மொடக்குறிச்சியில் தங்கி இந்த பணியினை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.! ஆளுநர் ரவியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.! எடப்பாடி பழனிசாமி
undefined
இந்த நிலையில் விஜயகுமார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது சாய்ந்து போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த எர்த் கம்பியை தெரியாமல் அவர் தொட்டுள்ளார். அப்போது விஜயகுமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிங்க: ஆபாசமாக பேசுபவனை விட்டு விட்டு..! பெண்களைத் தண்டிப்பதா.? இது மானம்கெட்ட பிழைப்பு- கஸ்தூரி ஆவேசம்
இதை அடுத்து படுகாயமடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விஜயகுமாருக்கு கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் விஜயகுமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விஜயகுமாருக்கு 50 சதவீத தீ காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.