ஈரோட்டில் பைக் ஒன்றில் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தியது.
ஈரோட்டில் பைக் ஒன்றில் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடிய வீடியோ பார்ப்போரை அச்சத்தில் ஆழ்த்தியது. ஈரோடு பெரியார் நகரில் நின்றுக்கொண்டிருந்த பைக்கில் நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனவிலங்கு மீட்புப் பணியாளருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி... புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனவிலங்கு மீட்புப் பணியாளர்கள் பாம்பை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விடுவித்தனர். இதுக்குறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் நாகப்பாம்பு பைக்கின் முன்பகுதியில் அமர்ந்து தாக்குவதற்கு தயாராக இருப்பதை காணலாம்.
இதையும் படிங்க: சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் மழை.. காலையில் வெயில் அடித்த நிலையில் தற்போது கனமழை
மேலும் நாகப்பாம்பு ஒரு புதருக்கு அருகில் முட்டையிட்டதைக் கண்டு அதனை மக்கள் உட்பட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மீட்புக் குழுவினர் பாம்பை பிடிக்க முயன்றபோது, அது மோட்டார் சைக்கிளில் ஏறி அதன் படம் எடுத்து தாக்கத் தயாரானது. சில முயற்சிகளுக்குப் பிறகு, மீட்புக் குழுவினர் நிலைமையைச் சமாளித்து பாம்பை அப்பகுதியில் இருந்து எடுத்துச் சென்றனர்.