3 பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி... வேலூரில் பரபரப்பு!

By vinoth kumar  |  First Published Sep 8, 2018, 10:56 AM IST

வீட்டு பாடம் எழுதாதை கண்டித்து ஆசிரியை கண்டித்ததால், அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.


வீட்டு பாடம் எழுதாதை கண்டித்து ஆசிரியை கண்டித்ததால், அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவிகள் 3 பேர், அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இச்சம்பவம் திருவண்ணாமலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனா மரத்தூரில் வனத்துறை அரசுப்பள்ளி உள்ளது. இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை ஏராளமான மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தமிழ் ஆசிரியையாக ராமாக்க என்பவர் பணியில் உள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் ராமாக்க, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். பின்னர், அந்த பாடத்துக்கான கேள்விகளை கொடுத்து, பதில் எழுதும்படி மாணவிகளுக்கு கூறியுள்ளார். அதில், மாணவிகள் சிந்து, ராஜகுமரி, காவ்யா ஆகியோர் சரிவர பதில் எழுதவில்லை என தெரிகிறது. இதனால், 3 பேரையும் ஆசிரியை ராமாக்கா கண்டித்துள்ளார். சக மாணவர்கள் மத்தியில், ஆசிரியை கண்டித்ததால், 3 பேரும் வேதனை அடைந்தனர்.

Tap to resize

Latest Videos

இதைதொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள அரளி மரத்தில் உள்ள விதையை அரைத்து 3 பேரும் சாப்பிட்டு மயங்கி விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அவர்களை உடனடியாக மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமயில் சேர்த்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி ஜமுனா மரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

click me!