3 மாதம் காத்திருந்து பழிவாங்கிய பாம்பு! கல் சந்திலிருந்து சீறி வந்து கொத்தியதில் பெண் பலி... திருபுவனை பரபரப்பு!

 
Published : May 09, 2018, 01:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
3 மாதம் காத்திருந்து பழிவாங்கிய பாம்பு! கல் சந்திலிருந்து சீறி வந்து கொத்தியதில் பெண் பலி... திருபுவனை பரபரப்பு!

சுருக்கம்

3 months and wait for the snake The woman kills

பெண் ஒருவரை கடிக்க முயன்று தப்பி ஓடிய பாம்பு, மூன்று மாதங்களுக்கு பின் மீண்டு வந்து கொத்தியதில் அந்த பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மாநிலம் திருபுவனை அடுத்துள்ள கிராமம் கொத்த புரிநத்தம். இங்கு வசித்து வசித்து வருபவர்கள் கிருஷ்ணன்-மனைவி மாரியம்மாள். 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் புதிதாக வீடு கட்ட திட்டம் போட்டு லாரியில் கருங்கற்களையும் விலைக்கு வாங்கினர்.

கருங்கற்களுடன் வந்த லாரி வீடு கட்டப்போகும் இடத்தில் வந்து லாரியிலிருந்து கருங்கற்களை கொட்டினார்கள்  இதனை லாரி அருகே நின்றுகொண்டு மாரியம்மாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது பாதி கருங்கற்கள் லாரியிலும், பாதி கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த போது, லாரியிலிருந்த கருங்கற்கள் குவியலிலிருந்து ஒரு விஷப்பாம்பு திடீரென மாரியம்மாளை பார்த்து நேராக வந்து கொத்த முயன்று சீறியது. பாம்பை பார்த்த மாரியம்மாள்  அலறியடித்து அங்கிருந்து நகர்ந்து ஓடிவிட்டார். உடனிருந்தவர்கள் அனைவரும் பாம்பை விரட்டி விட்டனர்.

ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் பாம்பை விரட்ட முடியவில்லை. விரட்டிய பாம்பையும் திடீரென மாயமானது. எங்கேயோ தப்பி ஓடிவிட்டது என்று நினைத்து விட்டுவிட்டார்கள்.இந்நிலையில் நேற்றோடு 3 மாதங்களாக மறந்தும் விட்டார்கள். இதனையடுத்து, நேற்று வீடு கட்டும் வேலை தொடங்கிய போது குவித்து வைக்கப்பட்ட கருங்கற்களிலிருந்து ஒவ்வொரு கற்களாக மாரியம்மாள் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது மாரியம்மாளை பார்த்து வந்த அதே பாம்பு சீறிக்கொண்டே ஒரு கல்லுக்கடியில் இருந்து வெளியேவந்து. மாரியம்மாள் அந்த பாம்பை பார்ப்பதற்குள் காலில் கொத்தியது.இதனால் வலி பொறுக்க முடியாமல் மாரியம்மாள் அலறினார். உடனடியாக சிகிச்சைக்காக சுகாதார நிலையத்துக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மாரியம்மாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருபுவனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 3 மாதங்களுக்கு முன்பு விரட்டியடிக்கப்பட்ட அதே பாம்பு மீண்டும் வந்து மாரியம்மாளை கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜனவரி 6-ம் தேதிக்குள்.! அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி நிச்சயமாக வரும்.! ட்விஸ்ட் வைத்து பேசிய அமைச்சர்!
Tamil News Live today 24 December 2025: Astrology - புத்தாண்டில் பொங்கு சனியால் அடிக்க போகுது அதிர்ஷ்டம் .! 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.!